பெற்ற தாயை சேலையை கழட்டி, பூ வைத்து மகள் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடுக்காட்டில் நடந்த பயங்கரம்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு மலைப்பகுதியில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சம்பாசிவம் என்பவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அவருடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் நிலையில் சம்பாசிவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனிடையே அவருடைய மனைவி சின்ன காளி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தாய்க்கு துணையாக அதே பகுதியில் வசிக்கும் அவருடைய இளைய மகள் கீதா அவருடைய கணவர் சிதம்பரம் மற்றும் 2 பிள்ளைகளோடு தாய் வீட்டில் வசித்து வருகின்றார்.

இதனிடையே அரசு சார்பாக வழங்கப்பட்ட ஆறு ஏக்கர் சொத்து சின்ன காளி பெயரில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கீதா பெயரில் ஒரு சொத்தை எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் வனத்துறை சார்பாக எழுதப்பட்ட ஆறு ஏக்கர் சொத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி கீதா கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதே ஊரில் உள்ள அவருடைய கள்ளக் காதலனுக்கு கொடுக்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த கீதா சொத்தை தன் பெயரில்தான் எழுதி வைக்க வேண்டும், நான்தான் உன்னை பார்த்துக்கொள்கிறேன், அவன் யாரு, அவன் பெயரில் எழுதி வைக்க என்று கேட்டு தாயிடம் சண்டை போட்டுள்ளார்.

அப்போது சின்ன காளி இந்த சொத்தில் மூத்த மகளுக்கும் பாகம் உண்டு என கூறி கீதா பெயரில் சொத்தை எழுதி வைக்க மறுத்துள்ளார். இதனால் தாய் மீது கீதா கோபத்தில் இருந்துள்ளார். மேலும் நான் சாகும் வரைக்கும் என் சொத்தை உனக்கு தரமாட்டேன், எல்லாம் என் முடிவு தான் என்று சின்ன காளி கூறியுள்ளார். இதனால் பல நாட்களாக திட்டம் போட்ட கீதா அவருடைய தாயை கொள்ள முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து உன் மருமகன் எங்கோ போயிருக்கான் வா போய் கூட்டிட்டு வரலாம் என்று கூறி கீதா தன்னுடைய தாய் சின்னக்காளியை நடுக்குப்பம் பகுதியில் உள்ள காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு அங்கு மறைந்திருந்த மருமகன் சிதம்பரம் மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கீதா தாயின் கையை பிடித்துக் கொள்ள சிதம்பரம் கல்லை கொண்டு மாமியாரின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த சின்ன காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு இருவரும் உயிர் போகும் வரை அங்கேயே காத்திருந்து கொலையை சின்னக்காளியின் கள்ளக்காதலன் செய்தது போல சித்தரித்து இறந்த சின்ன காளி அணிந்திருந்த ஆடைகளை கலைத்துவிட்டு சம்பவ இடத்தில் பூ மற்றும் கர்ச்சி போன்ற பொருட்களை போட்டுவிட்டு கற்பழித்து கொலை செய்தது போல சித்தரித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

சின்னக்காளியின் உடலை பார்த்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்னக்காளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கீதாவும் அவருடைய கணவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

40 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

1 மணத்தியாலம் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

2 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago