திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணியில் தீபம் ஏற்றும் வழக்கில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மலையின் மூன்று இடங்களைத் தவிர மலை முழுவதுமே இந்துக்களுக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, நெல்லி தோப்பு மற்றும் படிக்கட்டு மசூதிக்கு சொந்தமானது.
ஆனால் மற்ற அனைத்து இடங்களும் இந்துக்களுக்கு சொந்தமானது. அதனைப் போலவே கடந்த 2014 ஆம் ஆண்டு வந்த தீர்ப்புக்கும் தற்போது நீதிபதி சாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உண்மையை திரித்து கூறுகின்றார். கடந்த 1996 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பில் கூட தர்காவிலிருந்து 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றலாம் என்று கூறப்பட்டிருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
