‘வெள்ளை சட்டை, சந்தன பேண்ட்’…. “வாக்குச்சாவடிக்கு ‘விஜய் ஸ்டைலில்’ வந்த அண்ணாமலை”… பதறியடித்து உடனே கொடுத்த விளக்கம்…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அண்ணாமலை வாக்களிக்க வந்தபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் இன்று அடையாளமாக அணியத் திட்டமிட்டிருந்த வெள்ளைச் சட்டை மற்றும் சந்தன நிறப் பேண்ட் போன்றே அண்ணாமலையும் அணிந்து வந்ததால், அவர் தவெக-விற்கு ஆதரவளிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, தான் காவல்துறையில் இருந்து வெளியே வந்த காலத்திலிருந்தே இந்த உடையைத் தான் அணிந்து வருவதாகவும், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற பல தலைவர்கள் இதைப் பின்பற்றுவதாகவும் கூறி, தன்னை எந்தப் பக்கமும் சாய்த்துவிட வேண்டாம் எனத் தெளிவுபடுத்தினார்.

   

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பணப்பட்டுவாடா மற்றும் நகைகள் வழங்கும் நடைமுறை மிகத் துணிச்சலாக நடைபெற்று வருவதாகவும், கோயில்களில் கூடப் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சாதாரண மக்கள் சிறு தொகையை எடுத்துச் சென்றால் கூட நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினரின் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

   

மேலும், வெளியூர் சென்று வாக்களிக்க விரும்பும் மக்களுக்கான பேருந்து வசதிகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவையிலிருந்தும் குறைவாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பணமோ அதிகாரமோ ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தமிழக மக்கள் வன்முறையற்ற அமைதியான முறையில் தங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இத்தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.