திடீர் திருப்பம்… அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதால் சுமார் 13 தொகுதிகளில் வெற்றியை இழந்ததை அதிமுக தலைமை உணர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு பீகார் பாணியில் புதிய உத்தியை கையாள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிதறி கிடக்கும் பாதரசம் ஒன்றாக இணைவது போல பிரிந்துள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டு வருவதற்கு பாஜக முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதிமுக மற்றும் பாஜக வலுவடைந்தால் அது திமுக கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் எனவும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிகிறது. தேவையின் அடிப்படையில் அமையும் இந்த கூட்டணி தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்.