கேக் வெட்டி கொண்டாட்டத்தில் குதித்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் குழு… அட இதுதான் விஷயமா..? வைரலாகும் புகைப்படங்கள்…

By Begam

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர் டிஆர்பியில் முதலிடத்தை வகித்து வருகிறது.  ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த தொடரின் அச்சாணியாக செயல்பட்ட மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். ஆதி குணசேகரனாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

   

மேலும் மாரிமுத்து இறந்த மதியமே சன் தொலைக்காட்சியில் இருந்து வேல ராமமூர்த்திக்கு அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். கிடாரி, கொம்பன் போன்ற படங்களில் நடித்த வேலராமமூர்த்தி சின்னத்திரையில் நடித்து பரீட்சையும் இல்லாததால் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கால்ஷீட் கொடுத்திருப்பதால் உடனடியாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.  ஆனால் திடீரென இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று  பிப்ரவரி 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய வேல ராமமூர்த்தி அவர்களுக்கு, எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.