உங்க குழந்தைக்கு எளிதில் பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி?.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் முதல் அடையாள ஆவணம் மற்றும் எதிர்காலத்தில் அனைத்து சேவைகளுக்கும் அத்தியாவசிய ஆவணமாக இருக்கிறது. ஓட்டுநர் உரிமம், வாக்காலர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை மேலும்  இதுபோன்ற ஆவணங்களைப்  பெறுவதற்குப் பல இடங்களில் பிறப்புச் சான்றிதழ் முக்கியமாகவுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் உலகில் அனைத்துமே ஆன்லைன் ஆகிவிட்டது. தற்போது எந்த வயது வரம்பியில் இருந்தாலும் எளிதாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அனைத்து ஆவணங்களையும் வாங்கி விடமுடியும்.

https://DC.crsorgi.gov.in/crs என்ற அரசு வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பிக்க மாநகராட்சி மற்றும் வட்டாராட்சி அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்புச் சான்றிதழ் பெறலாம்.

பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: பெற்றோரின் ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் நிரந்தர மொபைல் எண்.

குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் பிறப்புச் சான்றிதழ் வாங்கினால் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அதுவே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் ரூ.5 கால தாமதமாகக் கட்டி தேவையான ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

குழந்தை பிறந்து 6 ஆண்டுக்குள் பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கு: குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். அதுவே குழந்தை பிறந்து 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டால் பள்ளிச் சான்றிதழ் உட்பட மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களை அனைத்தையும் சமர்ப்பித்து பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.

குழந்தை பிறந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டால், பெற்றோரின் அடையாளம் மற்றும் குழந்தையின் எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மதிப்பெண் பட்டியலும். பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக ரூ. 20 முத்திரை தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டிருக்க வேண்டும்.

பிறப்பிடச் சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் பெற்றோர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பெற்றோர்கள் தவறிவிட்டால் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும். 18 வயதுக்கு மேல் திருத்தங்கள் செய்தால் நீங்கள் பிறந்த காலத்தில் பெற்றோரின் அடையாளம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சேர்த்து பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக ரூ.20 முத்திரத்தாளில் பிரமாண பத்திரம் தயார் செய்து அதில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டிருக்க வேண்டும். அதேபோல் பிறப்பிடச் சான்றிதழில் குழந்தையின் பெயரை முழுமையாக மாற்ற முடியாது. பெயர் மாற்றத்தில் குடும்பப் பெயர் மற்றும் துணை பெயர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Divyamayakannan

Recent Posts

FIR-ல் பெயர் வராமல் இருக்க பல கோடி ரூபாயா?…. ஜெம் கிரானைட்ஸ் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…

1 minute ago

கம்யூனிஸ்ட்டுகளுக்கு செக் வைத்த CM விஜய்…. பனையூரில் இரவோடு இரவாக போடப்பட்ட ஸ்கெட்ச்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…

8 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

59 minutes ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

1 மணத்தியாலம் ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

1 மணத்தியாலம் ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

2 மணத்தியாலங்கள் ago