இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எளிதில் முடித்து விடுகிறோம். எந்த ஒரு தேவைக்கும் வெளியில் சென்று அலையாமல் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் வந்து விட்டன. அதன்படி இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இவை இல்லாமல் எந்த ஒரு சேவையையும் பெற முடியாது. அரசின் திட்டங்கள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் இந்த ஆவணங்கள் அவசியம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி அரசு தனது பல சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இனி பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை வாட்ஸ்அப் மூலமாக விண்ணப்பித்து பெற முடியும். இந்த திட்டத்தில் சேர்ப்பதற்காக பல துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 சேவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ‘வாட்ஸ்அப் மூலம் நிர்வாகம்’ என்ற திட்டத்தின் கீழ், தற்போது ஆன்லைனில் கிடைக்கும் சேவைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகீஐ இருமொழி AI மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
