தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை முழுமையாக அமல்படுத்தப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் முதலமைச்சர் விஜய், அரசு அலுவலர்களின் வருகைப் பதிவேட்டை நெறிப்படுத்தவும், பணி நேரத்தை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே, அரசு அலுவலகங்களில் காலதாமதத்தைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர இந்தத் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் முதல்கட்டமாக, மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த விரல் ரேகை மற்றும் முக அடையாள வருகைப் பதிவேட்டில் (Biometric) பதிவு செய்வது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட அமலாக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் இந்த பயோமெட்ரிக் முறை விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…