“100 கோடி உயிர்கள் பலியாகும்?”….. மனிதகுலத்துக்கு ஆபத்தாக மாறும் AI அசுர வளர்ச்சி… பில்கேட்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை…..!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மென்பொருள் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இல்லாத ஒன்றைக் கூட இருப்பது போலத் துல்லியமாக மாற்றிக் காட்டும் அளவுக்கு இதன் திறன் அசுரவேகத்தில் வளர்ந்துள்ளது. குறிப்பாக, AI உதவியுடன் உருவாக்கப்படும் போலி வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி, எது உண்மை, எது பொய் என்று கண்டறிய முடியாத அளவுக்குப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தக் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கே சவாலாக அமையலாம் என்று மென்பொருள் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஒருகட்டத்தில் மனிதர்களுக்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படும் AI ரோபோக்கள், மனித சமூகத்திற்கு எதிராகவும், ஆபத்தாகவும் மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது. தொழில்நுட்பத்தின் இந்த அதிவேகப் பாய்ச்சல், அதன் நன்மைகளைத் தாண்டி பேராபத்துகளை நோக்கியும் மனிதகுலத்தை நகர்த்திச் செல்கிறது.

   

இச்சூழ்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. AI தொழில்நுட்ப தவறான கரங்களில் கிடைத்தால், அது 100 கோடி உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தும் அளவுக்கு மிக வலிமையான மற்றும் ஆபத்தான ஆயுதமாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். எனவே, தீய நோக்கம் கொண்டவர்களிடமிருந்து இந்தத் தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கவும், அதன் தவறான பயன்பாட்டைக் தடுக்கவும் உலக நாடுகளின் அரசுகள் முறையான கண்காணிப்புகளையும் கடும் கட்டுப்பாடுகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.