வெறும் ரூ.20,000 கொடுத்தா வீடு தேடி பெண்கள் வருவாங்க… பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on தை 3, 2026

Spread the love

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர்தான் ரேகா ஆர்யா. இவரின் கணவர் கிரிதாரி லால் சாஹூவும் பாஜகவில் முக்கிய தலைவர் பதவியில் உள்ளார். இவர் பீகார் பெண்கள் தொடர்பாக கீழ்த்தரமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்டின் அல்மோரா பகுதியில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அவர், “உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்தில் திருமணம் செய்ய போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரில் இருந்து உங்களுக்கு பெண்களை அழைத்து வருவோம். அங்கே 20,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்கள் கிடைக்கும். என்று அவர் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

   

 https://twitter.com/MDKareemWadi/status/2007393274122908163