அவுங்களுக்கு அது தெரியவே இல்ல.. அந்த நேரத்துல நானும்.. பவதாரணிக்கு நடந்தது இதுதான்.. பல விஷியங்களை பகிர்ந்த பிக் பாஸ் யுகேந்திரன்..

By Mahalakshmi

Published on:

இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி 25ம் தேதி மாலையில்  புற்றுநோய் காரணமாக இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக போயிருந்த இடத்தில் காலமானார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்களை அதிகமாக வருத்தப்பட வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக பலர் பவதாரணி குறித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

   

அதில் நடிகர், பாடகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான யுகேந்திரன் பவதாரணி குறித்து சில தகவல்களை கூறியிருக்கிறார். சிறுவயது முதலாக குடும்ப நண்பரான யுகேந்திரன் பவதாரணி குறித்து உண்மை தெரியாமல் சிலர் தப்பு தப்பாக செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று வருத்தத்தையும் அதில் தெரிவித்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இளையராஜாவின் மகள் பவதாரணி பல திரைப்படங்களில் பாடல்களை பாடி பலருடைய சோகங்களை கரைய வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் காலமானார். இந்த நிலையில் அவருடைய மரணம் குறித்த தகவல்கள் பலரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அதே நேரத்தில் பவதாரணியின் இறப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் பலரும் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் யுகேந்திரன் பவதாரணி குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் சமூக வலைதளத்தில் சிலர் காத்து வாக்கில் கேள்விப்படுகிற விஷயத்தை அவர்களாக கண், காது வைத்து இஷ்டத்துக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை, பவதாரணிக்கு புற்றுநோய் இருந்தது ரொம்ப நாட்களுக்கு தெரியாமல் தான் இருந்திருக்கிறது. நான்காவது ஸ்டேஜுக்கு வந்த பிறகுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த நேரத்தில் நானும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். அப்போ எனக்கு தெரியாது ஆனால் இன்று அவர் இல்லை என்ற செய்தியை கேட்டதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. நாங்கள் சிறுவயதில் இருந்து குடும்ப நண்பர்களாக இருந்திருக்கிறோம். நான் பிரேம்ஜி, வெங்கட் பிரபு, கார்த்தி எல்லோரும் ஒரு குடும்பமா வளர்ந்திருக்கிறோம்.

ஏன்னா நாங்க எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே எங்க அப்பா எல்லாம் நண்பர்கள். அதனால் இன்று பவதாரணியின் பிரிவு எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் பவதாரணிக்கு புற்றுநோய் இருப்பது தெரியாமல் இருந்திருப்பது அதுக்கு காரணம் சின்ன சின்ன தொந்தரவுகள் வரும்போது அதை நாம அலட்சியம் செய்வதுதான் என்று எனக்கு தோன்றுகிறது.

நானும் என்னுடைய மனைவியும் இன்று பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்கனவே என்னுடைய நண்பர் ஆனந்த கண்ணன் என்பவருக்கும் இது போலத்தான் புற்றுநோய் பாதிப்பு நான்காவது கட்டத்தில் தான் தெரிய வந்திருக்கிறது. அவர் குறித்த நினைவுகளையும் நாங்கள் இன்று பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு பவதாரணியோடு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. நாங்க அவங்க வீட்டில் எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு இருக்கிறோம். அந்த பசுமையான நினைவுகள் எல்லாம் மனதிற்க்கு இப்ப கூட பவ்தா இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யுவனுக்கும், பிரபுவுக்கும் போன் பண்ணி பார்த்தேன். அவங்க எல்லாருமே ரொம்ப இடிஞ்சு போய் இருக்காங்க.

ஆர் டி பாஸ்கர் மகள் வாசுகியும் பவ்தாவும் தான் ரொம்ப க்ளோஸ். இப்போ இந்த செய்தியை கேட்டு வாசுகியை நான் எப்படி இதிலிருந்து மீட்டு கொண்டு வர போறோம்னு தெரியல என்று சொல்லி இருக்கிறார் யுகேந்திரன். அதோடு அவர் பேசுகையில் உண்மையான செய்தியை தெரியாமல் சிலர் பவதாரணிக்கு கிட்னி பெயிலியர் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில் நான் கேள்விப்பட்ட வரைக்கும் பவதாரணிக்கு புற்றுநோய் இருப்பது என்பதே நான்காவது ஸ்டேஜ்ல தான் தெரிய வந்திருக்கு. இனி ஒன்றுமே செய்ய முடியாது என்று கேள்விப்பட்டதால் தான் ஏதாவது சிகிச்சை பண்ணனும் என்பதற்காக தான் ஸ்ரீலங்காவில் இருக்கும் இயற்கை முறை வழி மருத்துவத்திற்கு போய் இருக்கிறாங்க.

அங்கு போய் ஒரு வாரம்தான் ஆன நிலையில் திடீரென இப்போ இப்படி ஆயிட்டு.. ராஜா சாரும் ஷோக்காக ஸ்ரீலங்கா போயிருக்காங்க அவங்க கூட பவதாரணியை போய் பார்த்து பேசிட்டு வந்ததாக நான் கேள்விப்பட்டேன். ராஜா சார் பார்த்துட்டு வந்த சாயங்காலம் தான் அவர் உயிர் பிரிந்து விட்டது என்று நான் கேள்விப்பட்டேன் என்று இந்த பேட்டியில் யூகேந்திரன் பேசி இருக்கிறார்.

author avatar
Mahalakshmi