“நான் இப்படி தான் பண்ணுவேன்டா”.. ராணவ்விடம் சீறிப்பாய்ந்த சௌந்தர்யா.. ரணகளமான பிக்பாஸ் வீடு..!

By Nanthini on கார்த்திகை 28, 2024

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் இதுவரை எலிமினேட் ஆகியுள்ளனர். இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

   

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

   

BB Tamil 8: Review

 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீட்டில் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கு புதுவிதமான டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதன்படி தற்போது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பீப் வார்த்தையில் திட்டிய ராணவ்.. பத்ரகாளியாக மாறிய ஜாக்லின் சௌந்தர்யா,  பிக்பாஸ் 8 இன்றைய எபிசோட் - Cinemapettai

அதில், போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ராணனவ் வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். அப்போது ஜாக்குலின் வயிறு புடிச்சு அமுக்குனா வலிக்காதா என்று கூறி சண்டை போடுகிறார். அத நீ ஒன்னும் பாக்கல இல்லை என்று கூறி ராணவ் எதிர்த்து நிற்கிறார். அந்த சமயத்தில் வரும் சௌந்தர்யா அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கோபப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைய சக போட்டியாளர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். அது தொடர்பான பரபரப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.