விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து போட்டியாளர் அரணவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பார்க்காத ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தால் இந்த வாரம் 6 புதிய வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை விஜய் டிவி களமிறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த வாரம் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகப் போகிறார் என கூறப்பட்ட வந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், முத்துக்குமாரை விஜய் சேதுபதி வச்சி செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் இவரை இப்படி பண்ணுவார் என்று கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்று கூறுகையில் விஜய் சேதுபதியும் தலையில் கிரீடம் ஏறினால் அந்த கணம் இருக்க தான் செய்யும் என்று முத்துக்குமாரை சாடியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
