விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் போட்டியாளர் அரணவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியை நடைபெற்று வருகிறது. இதில் இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர்தான் அதிக ஓட்டுகளை வாங்கி முன்னிலையில் இருப்பதால் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் இருப்பதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எளிமையாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். BB hotel டாஸ்க் போட்டியை போட்டியாக பார்க்காமல் தனிப்பட்ட முறையில் தாக்குனது யார் என்று போட்டியாளர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு போட்டியாளர்கள் பதிலளிக்காமல் இருக்க இவங்க வழக்கம் போல பூசி மழுக பார்க்கிறாங்க என்று விஜய் சேதுபதி கூறுகிறார். உடனே முத்துக்குமார் எழுந்து தெரியாது என்று கூற சௌந்தர்யா எழுந்து பேச ஆரம்பிக்கும் போது நீங்க உட்காருங்க என்று விஜய் சேதுபதி கூறுகிறார். உடனே ஜெஃப்ரியை எழுப்பி எதுக்கு இப்படி பண்ணிங்க என்று கேள்வி எழுப்புகிறார். இங்க இருந்து பார்த்தா எங்க எல்லாருக்கும் தெரியுது ஆனா அங்க இருக்கிற உங்களுக்கு தெரியலையா, ரொம்ப நாகரிகமா இருக்கீங்களா நீங்க என்று போட்டியாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
