பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அன்ஷிதா. கோவையை பூர்விகமாகக் கொண்ட இவர் மலையாள சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீரியலுக்குப் பிறகு இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 21 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய மலையாளம் கலந்த தமிழ் முயற்சி பல ரசிகர்களை கவர்ந்தது. அதே சமயம் பிக் பாஸ் வீட்டுக்குள் இவருக்கு சக போட்டியாளரான விஷாலுடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இவர் குறித்த பல செய்திகளும் பலம் வந்தது. இதனிடையே சமீபத்தில் இவர் ஜோடி ஆர் யூ ரெடி போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற வருகிறார். இப்படியான நிலையில் அன்ஷிதா தனது நீண்ட நாள் கனமான சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ள பதிவில், புதிய தொடக்கங்கள், எனது கனவு இல்லம். என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது.

இது வெறும் வீடு அல்ல. கடவுளின் பரிசு. கடினமான காலத்தில் என்னுடன் என்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எனக்கே என்மேல் சந்தேகம் வந்த போது என்னை நம்பி நான் மலர்வதற்காக நீங்கள் உதவி செய்தீர்கள். எனது கடினமான நாட்களை கொடுத்தவர்களுக்கும் நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் மண்பானையில் பால் காய்ச்சி சொந்த வீட்டுக்குள் குடிப்பு வந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

