விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு விதமான தாக்கம் நிகழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிக் பாஸ் வீட்டில் மட்டும் பரபரப்பு இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சேர்த்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் எப்போதுமே பொதுமக்கள் ஓட்டு தான் வெற்றியாளர்களை தீர்மானித்து வருகின்றது. அதேசமயம் போட்டியாளர்களை வெளியேற்றும் வருகிறது.
ஆனால் இந்த முறை முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட சாச்சனா வெளியேற்றத்தை பிக் பாஸ் தீர்மானித்து விட்டது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது. பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த எலிமினேஷன் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ அதே அளவுக்கு பரபரப்பை ரவீந்தரின் எலிமினேஷனும் முன்வைக்கப்பட்டது. வழக்கமாக முதல் வாரமே யாருமே எலிமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் வரலாற்றில் கிடையாது. ஆனால் இந்த முறை ரவிந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய ஆட்டம் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி சலசலப்பை உண்டாக்கியது ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றாலும் அவரின் உடல் நிலையும் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வெளியில் வந்த ரவீந்தர் முதலில் விஜய் சேதுபதி குறித்து ரிவ்யூ கூறினார். அதன் பிறகு சகட்டுமேனிக்கு சக போட்டியாளர்கள் பற்றி விமர்சனத்தை அடுக்கினார். முதலில் போட்டியாளர் அர்ணவ் பார்த்து நீ சுத்தமா பேக் என்று கூறினார். அடுத்ததாக ரஞ்சித், செல்லம் தங்கம் இதெல்லாம் ஒரு கேம் ப்ளான் தான் என்று கூறி விமர்சித்தார். அடுத்து தீபக் பற்றி பேசிய ரவிந்தர், எப்பயும் எதிரிய முன்னாடி தான் அடிக்கணும், முன்னாடி பேசணும் பின்னாடி பேச கூடாது என்று கூறினார். ஆண்களிடம் ஜால்ரா இருக்கு, மனசாட்சி தான் பெரிய கேமரா அதற்காக விளையாடுங்கள் என்று அறிவுரை கூறினார்.
பிறகு அருனிடம் வந்த ரவீந்தர், ஒவ்வொருவரிடமும் முன்னும் பின்னும் பேசுவதாக கூறினார். நீ நல்லா இன்னசெண்ட் மாதிரி நடிக்கிற தெளிவா விளையாடு என்றார். சத்யாவிடம் இங்கு மைண்டு தான் முக்கியம், பாடி முக்கியம் இல்லை என்று கூறினார். அடுத்து விஷாலிடம் வந்த ரவீந்தர், சமையல் நல்லா இல்ல, நீ உனக்காக யோசிக்க வேண்டும், ஒரே ஒரு என்டர்டைனர் நீ மட்டும் தான் என்று கூறினார். சௌந்தர்யாவிடம் பெஞ்ச தேய்கிறது நிறுத்து, தர்ஷா நீ விளையாடுறது போலியான விளையாட்டு என்று ஒவ்வொரு போட்டியாளர்களையும் விமர்சித்தார்.