‘ஆள விடுங்க… நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு’… ஊரைவிட்டே கிளம்பிய பிரதீப் ஆண்டனி.. இதுதான் காரணமா..?

By Begam on கார்த்திகை 19, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்  7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சகா போட்டியாளர்கள் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார்.

   

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்நிலையில், பிரபலங்களும், ரசிகர்களும், விஜய் டிவி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்தனர்.

   

 

 

அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களும், பதிவுகளும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.  இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தியின் லைவில் தனது காதலியுடன் கலந்து கொண்டார்.

இவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி தற்பொழுது பயணித்து கொண்டுள்ளார் பிரதீப். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில், சரி . ஜாலியா இருந்துச்சு. இப்போ ஒரு 4-5 ப்ரொடுசெர்ஸ் என்ன நம்பி கதை கேக்குறாங்க. நான் IFFI GOA 2024 கிளம்புறேன். 4 பாரின் படம் பாத்து, திருடி, ஒரு நல்ல script ரெடி பண்ணி, படத்தோட வரேன். ஆள விடுங்க. நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு. போயிட்டு வரேன் . நல்லா இருங்க’ என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு….