விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் நடன கலைஞர் மணி மற்றும் சீரியல் நடிகை ரவீனா இருவரும் இருந்தனர்.
இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் இவர்கள் நடந்து கொள்வதும் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே, வெளியில் இருந்த போது இருவர்கள் ரீல் செய்து போட்டுக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த பலரும் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்று கூறி வந்தனர்.
அதேபோல் பிக் பாஸ் வீட்டிலும் இருவரும் நெருக்கமாக நடந்து கொண்டனர். ஆனால் ரவீனாவின் குடும்பத்தினர் வந்து திட்டவும் இருவரும் பிரிந்து விட்டனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கூட இருவரும் சந்தித்து கொண்டது போல தெரியவில்லை. பிக் பாஸ் 7ம் நடிகை அர்ச்சனா டைட்டில் ஜெயித்த நிலையில் மணிச்சந்திரா இரண்டாம் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு அதில் கிடைத்த சம்பளத்தின் மூலம் பலரும் வீடு, கார் என செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மணிசந்திரா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் மகேந்திரா தார் காரை தான் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 22 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரே வெளியிட்ட வீடியோ…
View this post on Instagram