கமல் சாரே சொன்னாரு.. எனக்கு பிக்பாஸ்ல இருந்து கிடைச்சதே இதுதான்.. டைட்டில் வின்னர் ரித்திகா ஓபன் டாக்..!

By Nanthini on மார்கழி 17, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஏழு சீசன் களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் தற்போது இருந்த இடம் தெரியாமல் உள்ளனர். அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இலங்கை பெண்ணாக நடிக்கும் ரித்விகா | Virakesari.lk

   

அதன் பிறகு மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்ற விருதையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். அதன் பிறகும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

   

Bigg Boss Title Winners List: பிஸ் பாஸ் தமிழில் இதுவரை டைட்டில் வென்றவர்கள் யார் யார் தெரியுமா?

 

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு நிறைய பணம் கிடைத்தது. நான் பல பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருந்தேன். EMI கட்டுவதையே என்னுடைய வாடிக்கையாக கொண்டிருந்தேன். என்னோட முழு சம்பளமும் அதுக்கே போயிடுச்சு. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வருமானம் என்னுடைய EMI பிரச்சனைகளை தீர்த்தது. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன். நான் நடித்த சில திரைப்படங்கள் அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. வாய்ப்பு கிடைத்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டேன்.

திருமணமான பிரபல நடிகர் மீது எனக்கு க்ரஷ்.. ரித்திகாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்! | Actress Riythvika says about her crush - Tamil Filmibeat

நமக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத போது அதற்கான வழிகள் ஏதாவது நம் கண்ணில் பட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனை அப்போது ஒப்புக்கொண்டார். நான் நடித்த படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன அதனால் எனக்கு வருமானம் இல்லை என்று நான் கூறிய போது அப்போ நீங்க நம்ம ஆளு என்று அவர் கூறினார். ஏனென்றால் அப்போது அவர் நடித்த சில திரைப்படங்களும் வெளியாகாமல் இருந்த நிலையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் என்ற ரித்விகா பேசியுள்ளார்.