விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு விதமான தாக்கம் நிகழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிக் பாஸ் வீட்டில் மட்டும் பரபரப்பு இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சேர்த்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் எப்போதுமே பொதுமக்கள் ஓட்டு தான் வெற்றியாளர்களை தீர்மானித்து வருகின்றது. அதேசமயம் போட்டியாளர்களை வெளியேற்றும் வருகிறது. ஆனால் இந்த முறை முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட சாச்சனா வெளியேற்றத்தை பிக் பாஸ் தீர்மானித்து விட்டது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.

பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த எலிமினேஷன் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ அதே அளவுக்கு பரபரப்பை ரவீந்தரின் எலிமினேஷனும் முன்வைக்கப்பட்டது. வழக்கமாக முதல் வாரமே யாருமே எலிமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் வரலாற்றில் கிடையாது. ஆனால் இந்த முறை ரவிந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய ஆட்டம் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி சலசலப்பை உண்டாக்கியது ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றாலும் அவரின் உடல் நிலையும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது குறித்து பலரும் தற்போது ரிவ்யூ கொடுக்க தொடங்கியுள்ளனர். அதன்படி விஜய் சேதுபதி பற்றி பேசியுள்ள சினிமா துறையில் இருக்கக்கூடிய ஜோ மைக்கேல், விஜய் சேதுபதி இங்க இருக்கக்கூடிய ஆளே இல்ல. அவர் மட்டும் என் கூட சினிமாவுக்கு வந்தா கோடி கோடியா சம்பாதிக்கலாம். நல்லா இருக்க குடும்பத்தை ஈசியா கெடுத்து சண்டை போட வைத்து விடுவாரு.

கோர்த்து விடுவதில் தலைவன் வேற மாதிரி. பிக் பாஸ் வீடு பத்திகிட்டு எரியும் இவர் செஞ்ச வேலையா என்று அவர் பேசியுள்ளார். அதாவது விஜய் சேதுபதி கடந்த வாரம் போட்டியாளர்கள் பற்றி மற்றொருவர் மறைமுகமாக பேசியதை வெளிப்படையாக அனைவரும் முன்பும் போட்டு உடைத்தார். போட்டியாளர்களுக்குள் பெரிய சண்டையை உண்டு பண்ணியதால் விஜய் சேதுபதியை இவ்வாறு ஜோ மைக்கேல் விமர்சித்துள்ளார்.
