நீங்கலாம் ஹீரோயின் ஆகும்போது நான் ஹீரோவா ஆக மாட்டேனா.? வெள்ளித்திரையில் கால் வைக்கும் BB அமுல் பேபி..

By Ranjith Kumar

Published on:

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிவடைந்தது. இதில் மொத்தம் 23 போட்டியாளர்கள் களமறக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் வைல்ட் கார்டு மூலம் களமிறங்கியவர்கள். பாவா செல்லதுரை ,சரவண விக்ரம், மணி,  மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, ஜோவிகா, விஷ்ணு, விஜய் வர்மா, பூர்ணிமா, அக்ஷயா உட்பட 18 போட்டியாளர்களும்,

அர்ச்சனா, கானா பாலா ,தினேஷ், ஆர் ஜே பிராவோ, அன்னபாரதி என ஐந்து வைல்ட் கார்டு  போட்டியாளர்களும் இந்த பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதற்கடுத்ததாக பல சர்ச்சைகள் பல சஞ்சரவுகள் சண்டைகள் முடிந்தபின் இறுதியாக இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ் , விஷ்ணு என 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் முதன்முறையாக பிக் பாஸ் வரலாற்றிலேயே வைல்ட் கார்டு போட்டியாளரான அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

   

இரண்டாவது இடத்தை போட்டியாளர் மணி பிடிக்க, மாயா, தினேஷ், விஷ்ணு அடுத்தடுத்து இடங்களை பிடித்தனர். தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்து வெளிய வந்தபின் மாயா, அர்ச்சனா, பூர்ணிமா போன்றவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது. அடுத்தடுத்து தங்களின் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு கொண்டு தங்களின் மௌசை ரசிகர் மத்தியில் தெரிவித்து வந்தார்கள். அர்ச்சனா, பூர்ணிமா, மாயா இவர்களுடன் இணைந்து டப் கொடுத்த போட்டியாளர் விஷ்ணு அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறது என்று பலரும் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தார்கள்.

தற்போது அவர்களின் வாயை மூடு விதமாக விஷ்ணு ஒரு அறிவிப்பை தெரிவித்து இருக்கிறார். தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்த படம் ஒன்றை தற்போது தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அப்பிடத்தில் பிக் பாஸ் விஷ்ணு அவர்கள் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் சக நடிகர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தற்போது தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆபீஸ் போன்ற சீரியல்களில் நடித்த பிரபலமாகி தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த நிலையில், பிக் பாஸில் வந்து தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் விஷ்ணு, இதற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது வந்து குவிந்து கொண்டிருக்கிறது, இதற்கு அடுத்ததாக இவர் பல படங்கள் நடித்து வெற்றி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar