இந்தவார ஓபன் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்… பெண் போட்டியாளரை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்..!

By Soundarya on கார்த்திகை 18, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார்.

#image_title

போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், பிரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்தனர்.

   
   

Bigg Boss Tamil Season 8 | 15th October 2024 - Promo 2 - YouTube

 

இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற ரியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்பாக சுனிதா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அணி ஒருபுறமும் ஆண்கள் அணி ஒருபுறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Bigg Boss Soundarya: பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17  லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்!

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய பங்களிப்பை போட்டு சிறப்பாக விளையாடினர். இந்த டாஸ்க் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்த வார ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ் சௌந்தர்யாவை டார்கெட் செய்கிறார்கள். இந்த புரோமோ வெளியாகியுள்ளது.