Connect with us

‘செருப்பால அடிப்பேன்’… பிரதீப், கூல் சுரேஷ் இடையே வெடித்த சண்டை… போர்க்களமான பிக் பாஸ் வீடு…

CINEMA

‘செருப்பால அடிப்பேன்’… பிரதீப், கூல் சுரேஷ் இடையே வெடித்த சண்டை… போர்க்களமான பிக் பாஸ் வீடு…

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 31 நாட்களை கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது உள்ளே சென்றுள்ள வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை வைச்சு செய்து வருகின்றனர் ஏற்கனவே இருந்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.

 

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர்.

இவர்களை தொடர்ந்து  பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். இவர்களில் அர்ச்சனாவை மிகவும் கஷ்டப்படுத்தி அழ வைத்து நேற்றைய எபிசோடில் மாயா தனது சுயரூபத்தை காட்டியிருந்தார். பிரதீப், மாயா, பூர்ணிமா மூவரின் மீதும் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்பது மட்டும் உறுதி.

இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் ‘அசைஞ்சா போச்சு’ டாஸ்க்கில் ஆரம்பித்த கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் இடையிலான வாக்கு வாதம் தற்போது முற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை நடைபெறுகிறது. பிரதீப் கூல் சுரேஷை தகாத வார்த்தைகளினால் திட்டுகிறார். இவர்களின் சண்டைக்கு இடையில் விஷ்ணு தலைஇடுகிறார். சில்ரப்பையன், செருப்பால அடிப்பேன் என கத்துகிறார் பிரதீப் . இந்த சண்டையினை தடுக்க வந்த போட்டியாளர்களையும் பொருட்படுத்தாமல் திட்டி விட்டு செல்கிறார். இவ்வாறு இந்த ப்ரோமோ முடிந்துள்ளது. இத்தனை நாளாக மறைத்து வைத்திருந்த பிரதீப்பின் உண்மை முகம் தற்பொழுது தான் வெளிப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கூட கூறிவருகின்றனர். இதோ அந்த பரபரப்பு ப்ரோமோ வீடியோ…

Continue Reading
To Top