Connect with us

“நீ இப்டி இருக்குறது தப்புனு உனக்கு தெரில.. நா வாய தொறந்து எல்லாத்தையும் சொன்னா நீ காலி”.. நிக்சனை வாயடைக்க செய்த மணி… வெளியான பரபரப்பு ப்ரோமோ…

CINEMA

“நீ இப்டி இருக்குறது தப்புனு உனக்கு தெரில.. நா வாய தொறந்து எல்லாத்தையும் சொன்னா நீ காலி”.. நிக்சனை வாயடைக்க செய்த மணி… வெளியான பரபரப்பு ப்ரோமோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 41 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்தபிக் பாஸ் நிகழ்ச்சியில்  மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா,  வினுஷா யுகேந்திரன், பிரதீப், அன்னபாரதி என  7 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

  

இதில் கடந்த சனிக்கிழமை எபிசோடில்  ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி  பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் கமலஹாசன். தற்பொழுது வரை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கமலஹாசனுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களமிறங்கியவர்கள் பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், அன்னபாரதி, RJ பிராவோ . வந்த நாள்முதலே அழுதுகொண்டே இருந்த அர்ச்சனா தற்பொழுது கலக்கி வருகிறார்.

   

 

இந்நிலையில் பிக்பாஸ் வீடு தற்போது நீதிமன்றமாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் ‘ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி இடையூறாக இருக்கிறான்’ என்று நிக்சன் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு மணி ‘நான் ரவீனாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறேன் என கூறுகிறான். ஆனால் ஐஷுவின் வளர்ச்சிக்கு நிக்சன் இடையூறாக தான் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்’ என கூறுகிறார்.

மேலும் ‘நிக்சன் ஐஷுவின் வளர்ச்சிக்கு இடையூறுதான் என ஐஷு என்னிடம் வந்து பேசியுள்ளார் நான் அதை கூறினால் வேற மாதிரியான பிரச்சினைகள் வரும்’ என மணி கூற வழக்கு சூடுபிடித்துள்ளது. இந்த புகாருக்கு நிக்சன், ‘ரவீனாவை பாதுகாக்கும் நோக்கில் அவர் என்ன வேலை செய்கிறாரோ அந்த வேலையைத்தான் நானும் செய்கிறேன்’ என்று கூற , இந்த வழக்கின்  நீதிபதி விஷ்ணு என்ன தீர்ப்பு வழங்க வழங்க போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதோ அந்த பரபரப்பு ப்ரோமோ வீடியோ…

Continue Reading
To Top