“உலக மகா நடிப்பு, என்ன பேச்சு பேசினாரு”.. நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!

By Nanthini on ஐப்பசி 19, 2024

Spread the love

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்துள்ள நிலையில் தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தற்போது இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. இதில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள் உள்ளே வந்த சில மணி நேரத்திலேயே ஆட்டமும் தொடங்கிவிட்டது. இந்த முறை ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடுகின்றன.

   

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் மகாராஜா பட நடிகை சாச்சனா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அவர் உள்ளே வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

   

 

சற்று முன் அது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்களில் தர்ஷா குப்தா மற்றும் அர்ணவ் ஆகிய இருவரும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தற்போது குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் அர்ணவ் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.