முத்து செய்த வேலையால் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கு பெரிய ஆப்பு வைத்த பிக்பாஸ்.. வெளியான இன்றைய ப்ரோமோ..!

By Nanthini on டிசம்பர் 20, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் முத்துக்குமரன் - நடந்தது என்ன? | Bigg Boss Season 8 Muthukumaran Crying Promo

   

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

   

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் முத்துக்குமரன் - நடந்தது என்ன? | Bigg Boss Season 8 Muthukumaran Crying Promo

 

இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கை விறுவிறுப்பாக ஆடி வருகிறார்கள். அதன்படி இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் கேப்டன் பதவிக்கான டாஸ்க் மட்டுமல்லாமல் ஃபைனலுக்கான டாஸ்க்கும் நடைபெற்ற நிலையில் முத்துக்குமார் ஒரு கட்டத்தில் பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்தார். இதனை உன்னிப்பாக கவனித்த பிக்பாஸ் யாருமே எதிர்பார்க்காத விதமாக டாஸ் கை ரத்து செய்து போட்டியாளர்களுக்கு மற்றொரு பேரதிர்ச்சியையும் கொடுத்தார். இதனால் தனது தவறை உணர்ந்த முத்துக்குமார் கதறி அழுகிறார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ வைரலாகி வருகிறது.