OMG: பிக்பாஸ்-8 சீசனின் முக்கிய புள்ளி திடீர் தற்கொலை… பெரும் அதிர்ச்சியில் Biggboss குழுவினர்..!

By Soundarya on மார்கழி 3, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது.  இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.  பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

Bigg Boss Season 8: வெளியானது 15 போட்டியாளர்களின் முழு பட்டியல் - லங்காசிறி  நியூஸ்

   

ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.

   

 

இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் வீட்டில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 6 ஆவதாக கடந்த வாரம் சிவகுமார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ்-8 அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும்அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.