Connect with us

CINEMA

வெளியானது பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ… நடுக்கடலில் நின்று சத்தமில்லாமல் அறிவிப்பை வெளியிட்ட கமல்… வைரலாகும் வீடியோ…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக  கலந்து கொள்பவர்கள்  மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர்.

   

‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில், ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ரங்கநாதன் ஆகியோரின் பெயர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. தற்போது 7ம் சீசன் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

இன்று மாலை 7 மணி 7 நிமிடங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வரும் என விஜய் டிவி முன்பே அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.  அந்த ப்ரொமோவில் கமல் நடுக்கடலில் நின்று ஷோவை அறிவித்து இருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோவானது வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Continue Reading

More in CINEMA

To Top