பிரமாண்டமாக தொடங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 6…போட்டியாளர்கள் இவர்கள் தானா?…full list இதோ…

By Begam on ஐப்பசி 4, 2022

Spread the love

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்பொழுது  6-வது சீசன் அக்டோபர் 9 ல் தொடங்கவுள்ளது.

   

கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த 6 வது சீசனையும் உலகநாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என்பது ப்ரோமோ மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. தற்பொழுது  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.மேலும் இது அதிகாபூர்வமான பட்டியல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

அதன்படி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ராஜா ராணி அர்ச்சனா, மைனா நந்தினி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, VJ ரக்ஷன், சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.