அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான பிக்பாஸ் இவர்தானா..? யாரோடு இருக்கார்னு பாருங்க..!

By Soundarya on தை 21, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்து விட்டது. தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு  மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான். இதற்கு முன்பாக கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது கமலஹாசன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வந்தார்.

   

அதேபோல விஜய் சேதுபதியும் பெற்றார் என்றே சொல்லலாம். இந்த சீஸனின் டைட்டில் வின்னராக முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது.  அந்தவகையில் டைட்டிலை முத்துக்குமரன் தட்டி சென்றுள்ளார். கடந்த சீசன்களை விட இந்த சீசன்தான் அதிகம் வியூஸ் வந்திருக்கிறது என்று விஜய் டிவி தரப்பு பைனல் மேடையிலேயே தெரிவித்தது.

   

 

இதனால் விஜய் சேதுபதி அடுத்த தொகுப்பாளராக தொடர்வார் என்றும் அறிவித்துள்ளார்கள். மேலும் பிக் பாஸ் முடிந்த பிறகு நடந்த பார்ட்டியில் போட்டியளாக மற்றும் பணியாற்றியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அந்தவகையில் எல்லாரையும் கவர்ந்துவரும் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோவும் அந்த பார்ட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவருடன்  இருப்பது சௌந்தர்யாவின் பிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.