கையில் கிளாஸ் உடன் ரட்சிதா வெளியிட்ட வீடியோ.. இதுதான் விஷயமா..? குவியும் கமெண்ட்ஸ்கள்..!

By Mahalakshmi on ஏப்ரல் 23, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர். கன்னட சினிமாவிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கின்றார். இந்த சீரியலுக்குப் பிறகு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானார்.

   

இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா அங்கு தனது கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

   

 

இதற்கு அடுத்த சீசனில் தினேஷ் கலந்துகொண்டு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பல விஷயங்களை பேசினார். இருப்பினும் எதுவும் கைக்கூடவில்லை. இருவரும் தற்போது பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ரக்ஷிதா இன்று தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த ரக்ஷிதா உங்களை ரக்ஷிதா கேஸ்டலுக்கு வரவேற்கிறோம். தனிமையில் அமைதி இப்படித்தான் இருக்கும்.

தனது சொந்த வழியில் 33 வயதில் அடி எடுத்து வைக்கிறேன் எனது ஒய்னுடன் நானும் எனது சிறிய வீடும். எங்க வீடு வாங்கி ஒரு வருடம் ஆகின்றது. எனக்கு 33வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும், எனது வீட்டிற்கும் முதல் வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் ரக்ஷிதா.