Categories: CINEMA

1 இல்ல 2 இல்ல தொடர்ச்சியாக 3 படம்.. ஒதுக்கியவர்களை வாயை பிளக்க வைக்கப்போகும் பிரதீப் ஆண்டனி.. வெளியான அப்டேட்..

அருவி படத்தில் பீட்டர் என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ஆண்டனி. அதன்பின்னர் சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக கவினின் டாடா படத்தில் காமெடி ரோலில் நடித்த அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் பிரதீப் ஆண்டனி.

இதனால் முதல் வாரத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்தது. அதேபோல் ஆரம்பம் முதலே இந்த சீசனின் டைட்டில் வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது. ஒருகட்டத்தில் பிரதீப் ஆண்டனியின் அசுர வளர்ச்சியை கண்டு பயந்துபோன மாயா, பூர்ணிமா, நிக்சன், ஐஸு, ஜோவிகா உள்ளிட்ட சிலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற காரணமாகினர். இதனால் பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத போதும் பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதற்காக கமல்ஹாசனை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். அதேபோல் மாயா, பூர்ணிமா குழுவினரை புல்லி கேங் என ஹேஷ்டே,

அதேநேரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் பிரதீப் ஆண்டனி டிவிட்டரில் தொடர்ந்து பல சம்பவங்கள் செய்து வந்தார். டைட்டில் வென்றிருந்தால் கூட பிரதீப் ஆண்டனிக்கு இவ்வளவு சப்போர்ட் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அந்தளவிற்கு பிரதீப் ஆண்டனியின் பிக் பாஸ் வைப் ரசிகர்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்நிலையில் விரைவில் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகவுள்ளாராம் பிரதீப்.

இயக்குநராக வேண்டும் என்பது தான் தனது கனவு என பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பு கமல்ஹாசனிடம் கூறியிருந்தார் பிரதீப் ஆண்டனி. அதற்காக கதை எழுதி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பிரதீப் ஆண்டனிக்கு ஹீரோ சான்ஸ் தேடி வந்துள்ளது. இந்தப் படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago