காதலியுடன் புகைப்படத்தை வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.. அவரே வெளியிட்ட பதிவு..!

By Mahalakshmi on ஆனி 17, 2024

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரதீப் ஆண்டணி தனது நீண்ட நாள் காதலியை நிச்சயதார்த்தம் செய்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. ஏழாவது சீசன் தொடங்கிய முதலே ஹார்ட் டாப்பிக்காக இருந்தது பிரதீப் ஆண்டனி மட்டும் தான். அவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாயா, பூரணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் தங்களுக்கு அவரிடம் பாதுகாப்பு இல்லை என கூறி கமலிடம் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

   

   

மேலும் அவர் வீட்டில் இருக்கலாமா? வேண்டாமா? என்று ஹவுஸ் மேட்டிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் பெரும்பாலாரோ ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் கமலஹாசனும் அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பி விட்டார். இதற்கு பலவித எதிர்ப்புகள் கிளம்பியது. முக்கியமாக நிக்சன் எல்லாம் ஐசுவிடம் வரம்பு மீறி நடந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டிலிருந்த மற்றொரு பெண்ணையும் தரக்குறைவாக பேசியிருந்தார்.

 

இதெல்லாம் பாதுகாப்பாக இல்லையா? அதுமட்டுமில்லாமல் மாயா பூர்ணிமாகிய இருவரும் எத்தனையோ முறை அடல்ட் காமெடிகளை செய்திருக்கிறார்கள் என பலவித எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள். பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பிரதிப் தரப்பு நியாயத்தையே கேட்காமல் கமலஹாசன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்று தொடர்ந்து அவர் மீதும் சர்ச்சைகள் இருந்தது.

அதே சமயம் கவலையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருந்த பிரதீப் நல்லா இருங்க, தீர விசாரிப்பதை மெய் என்று பதிலடி கொடுத்தார். அவரது இந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு ஃபேன் ஃபாலோயிங்சும் அதிகமானது. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தையும் உறுதியாக்கி இருக்கின்றார்.

இந்நிலையில் பிரதிப் ஆண்டனி தனது நீண்ட நாள் காதலியை நிச்சயதார்த்தம் செய்திருக்கின்றார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்த அவர் எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்து விட்டார்கள் 90’ஸ் கிட்ஸ் சோதனை என பகிர்ந்து இருக்கின்றார்.