தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. நடிகை நயன்தாரா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அதே நேரத்தில், கதாநாயகிகளை மட்டுமே மையமாகக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் கடும் போட்டிக்கு மத்தியில் அதிக திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அன்னபூரணி படத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்போது சிறப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பூர்ணிமா.வருக்கென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். யூட்யூப் பிரபலமான இவர் தற்பொழுது நன்றாக இருந்த தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் இணைந்து செய்யும் வேலைகள் ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறது.

இதனால் அவர் மக்களுக்கு மத்தியில் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸில் பங்கேற்றுள்ள பூர்ணிமா நடிகை நயன்தாராவுடன் ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது நடிகை நயன்தாராவுடன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

