விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.இவர் தனது சொந்த காசில் தற்பொழுது வரை 4 ஆம்புலன்ஸ் ஏழை எளிய மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார் .
இதுமட்டுமின்றி ஏழை மக்களுக்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தற்பொழுது லட்சக்கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.
நடிகர்கள் சூர்யா, கார்த்திக் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பண உதவி செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண்(1,00,000) உட்பட பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர். அதுபோல விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை தனது சொந்த காசில் வழங்கி உள்ளார். தற்பொழுது இவரின் இந்த செயலை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அவர் ஏழை மக்களுக்காக உதவி செய்த அந்த வீடியோ…