பூர்ணிமாவை தொடர்ந்து ஹீரோயின் அவதாரம் எடுத்த bully gang தலைவி ‘மாயா’.. BB-ல் உருட்டிய உருட்டுக்கு கிடைத்த பலனா.! உச் கொட்டும் ரசிகர்கள்..

By Ranjith Kumar on மார்ச் 15, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, நிக்சன், மாயா, பூர்ணிமா, ஜோவிகா, பாவா செல்லதுரை உள்ளிட்ட ஏராளமானோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு வேர்ல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.


மாயா இறுதி சுற்று வரை வந்தும் டைட்டிலை பெறவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவணன், ஆகியோர் ஒன்றாகவே இருப்பார்கள். மக்கள் அவர்களை Bully gang என அழைக்க ஆரம்பித்தார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் ஜோவிகா, நிக்ஸன், சரவணன், பூர்ணிமா, மாயா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.

   

வனிதா வைத்த பார்ட்டிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிக்ஸன் நடராஜன் நாட்டியம் என்ற பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் ஜோதிகா பூர்ணிமா மாயா ஆகியோரும் பங்கேற்று பாடலை கேட்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்ற பாடலை நிக்ஸன் எழுதியனுக்காக மாயா தற்போது வரை நல்ல சப்போர்ட்டை கொடுத்து வருகிறார்கள். தற்போது இந்த நிலையில் பிக் பாஸை விட்டு வெளியே வந்தபின் மாயாவுக்கு பட வாய்ப்புகள் பல குவிய ஆரம்பித்தது, அந்த வரிசையில் பைட்டர் ராஜா என்ற படத்தில் கதாநாயக கமிட் ஆகியுள்ளார்.

   

இப்படத்தின் பூஜை நடைபெற்று புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று வருகிறது. கிருஷ்ணா பிரசாத் அவர்கள் இயக்கத்தில் டமாட்டா மீடியா மற்றும் ரன்வே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரமேஷ் மற்றும் மாயகிருஷ்ணன் அவர்கள் நடிப்பில் தற்போது இப்படம் உருவாகி வருகிறது. மாயா, இப்படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு இப்படம் தனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று மனதளவில் பெருமிதம் கொண்டு தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)