BREAKING: திமுகவில் இணைகிறார் ‘பிக் பாஸ்’… ஸ்டாலின் வீசிய வலையில் சிக்கிய முக்கிய புள்ளி….. அதிரும் அரசியல் களம்….

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

பிரபல ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான டப்பிங் கலைஞரும், நடிகரும், மனவளம் சார்ந்த ‘லைஃப்ஸ்டைல் கன்சல்டன்ட்’ ஆலோசகருமான ‘சாஷோ’ என்ற சதீஷ் சாரதி, தற்போது திமுக தலைமையுடன் இணைந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் அண்மைக்காலமாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி ஏற்படுத்தி வரும் அதிர்வலைகளுக்கும், குறிப்பாக ‘ஜென் ஜி’ (Gen Z) எனப்படும் இளைய தலைமுறையினரை நோக்கி அவர்கள் வீசும் வலைகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவே திமுக இந்த அதிரடி உத்தியைக் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்கால இளைஞர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப அரசியல் பிரச்சாரங்களையும் வியூகங்களையும் வகுப்பதில் வல்லவரான சாஷோவை, திமுகவின் புதிய ஆலோசகராக நியமிக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அவரது ஆளுமையும், இளைஞர்களைக் கவரும் பேச்சுத் திறனும் வரவிருக்கும் தேர்தல் களத்தில் திமுகவுக்கு இள ரத்தங்களின் ஆதரவை அள்ளிக் குவிக்க உதவும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.