Categories: சினிமா

கணவருடன் கோவாவுக்கு ட்ரிப்.. மாடர்ன் மங்கையாக மாறிய பிக்பாஸ் தாமரை.. வைரலாகும் பிக்ஸ்..!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான தாமரை தனது கணவருடன் கோவா சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கின்றதா? என்று கேட்டால் சந்தேகம் தான். ஒரு சிலர் மட்டுமே அந்த நிகழ்ச்சி மூலமாக ஜொலித்திருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவர்கள் என்று பார்த்தால் கவின், லாஸ்லியா, தாமரை போன்றவர்களை கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரும் புகழையும் பெற்றவர் தாமரை. நாடக கலைஞராக இருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தாமரை சிறிது நாட்களிலேயே மிகவும் பிரபலமானார்.

தனது பேச்சுத் திறமையால் சிறந்த போட்டியாளராக விளங்கிய இவர் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தார். நாடக கலைஞராக இருந்த இவர் கூத்து கட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரது எதிர்காலமே மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடிகளில் கலந்துகொண்டு தனது நடன திறமையை காட்டிய தாமரை தொடர்ந்து நிகழ்ச்சிகள், சீரியல்கள் நடித்து வருகின்றார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடரில் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் தாமரை அதில் பல விஷயங்களை பகிர்ந்து அதிலும் சம்பாதித்து வருகின்றார். சரியாக வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த தாமரை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தனது வாழ்க்கையை மாற்றி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்நிலையில் தாமரை தனது கணவருடன் கோவாவிற்கு டூர் சென்று இருக்கின்றார். எப்போதும் புடவையில் கலக்கி வரும் தாமரை மார்டனாக விமான நிலையத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கோவா சென்றிருக்கும் அவர் அங்கு மாடர்ன் உடையில் வலம் வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago