என்னை பார்த்து பயம்..! விஜயகாந்துக்கு பிறகு நான் தான்… விஜய், SK-க்கு போட்டியே நான் தான்… பரபரப்பை கிளப்பிய BB திவாகர்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

தனது நடிப்புத் திறமை குறித்துப் பேசிய திவாகர், “நடிப்பு என்று வந்துவிட்டால் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன், அவருக்கு அடுத்து நான் தான். ஒரு ஹீரோவுக்குத் தேவையான அனைத்துத் திறமைகளும் என்னிடம் உள்ளன. ஆனால், என்னைப் பார்த்துப் பயந்து சிலர் எனக்கு எதிராகச் சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் இருந்து வந்த கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை யாரும் நிரப்பவில்லை என்றும், அந்த இடத்தை நிரப்பவே தான் வந்துள்ளதாகவும் கூறினார். “விஜயகாந்தைப் போலவே அடுத்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் நான் ஆவேன்” என்று அவர் கொடுத்த உறுதி, இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.