மாதவிடாய் தீட்டல்ல, அது கடவுள் கொடுத்த வரம்… பிக்பாஸ் அர்ச்சனாவின் நெத்தியடி பதில்…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பல்ஸ்’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகை அர்ச்சனா, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூகப் பார்வை குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், மாதவிடாய் என்பது தீட்டு கிடையாது என்றும், அது பெண்களுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்றும் அர்ச்சனா குறிப்பிட்டார். இதில் பெண்கள் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் மாதவிடாய் கால வலிகளைச் சகோதர உணர்வுடன் புரிந்து கொண்டு, தனக்குத் தேவையான உதவிகளைச் செய்த நடிகர் கூல் சுரேஷுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். சமூகம் இத்தகைய இயற்கை நிகழ்வுகளைத் தவறாகப் பார்ப்பதை விடுத்து, புரிதலுடன் அணுக வேண்டும் என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் வலியுறுத்தினார்.