விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் எந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு பார்வையாளர்கள் யாரும் குறை சொல்லாத வகையில் இந்த நிகழ்ச்சியை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்கள் உடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று போட்டியாளர் ரயான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டனர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர்தான் ராணவ். பிக்பாஸ் வீட்டில் முடிந்த அளவிற்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு மக்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர்.
இப்படியான நிலையில் ராணவ் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் பலருக்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் அவருக்கு ரசிகர்கள் பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று கூட தனக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இப்படியான சூழலில் ராணவை சந்தித்த சனம் ஷெட்டி அவருக்கு வாழ்த்துக்களை சந்தித்துள்ளார். அதில் அவருக்கு கிப்ட் ஒன்றையும் கொடுக்கிறார். அதில் ரியல் ஹீரோ ராணவ் கேசரி என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ராணவ் நீங்க 24 கேரட் தங்கம். உங்களுக்கு நிறைய fans இருக்காங்க என்று கேட்டுள்ளார் சனம் ஷெட்டி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து ஷணம் ஷெட்டி, ரானவ் மற்றும் அவரது அழகான குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டது மறக்க முடியாத நாட்களில் ஒன்றாகும் என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…