பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரியா.. 14 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 18, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார். போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு  வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், ரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற சுனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

BB Tamil 8 Day 39: காதல் வதந்தியால் வெடித்த சண்டை; தீபக் செய்த தரமான காமெடி  சம்பவம் | BBTAMIL 8: DAY 39: Biggboss tamil season 8 day 39 Highlights -  Vikatan

   

இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அணி ஒருபுறமும் ஆண்கள் அணி ஒருபுறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய பங்களிப்பை போட்டு சிறப்பாக விளையாடினர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை டாஸ்க் பற்றி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பி விஜய் சேதுபதி கலகலப்பாக பேசினார். அடுத்து நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் சிலரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி எலிமினேஷனையும் வேறு விதமாக நடத்தினார்.

   

வழியனுப்ப வந்தவரை வழி அனுப்பி வைத்த பிக்பாஸ்.. முதல் வாரத்திலேயே எண்டு  கார்டு போட்டு முடித்து விடப்பட்ட போட்டியாளர்!

 

இந்த வாரம் எலிமினேஷன் வேறு விதமாக நடந்தது. தான் வெளியேற்றப்படுவதை அறிந்த போட்டியாளர் ரியா கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். அவரை ஜாக்களின் உட்பட சிலர் ஆறுதல் கூறினர். எலிமினேட் ஆகி விஜய் சேதுபதி உடன் ரியா பேசத் தொடங்கியதும் அழத் தொடங்கி விட்டார். மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தன் அம்மா பற்றி சற்று எமோஷனலாக பேசி அங்கிருந்து கிளம்பினார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரியா சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க அவருக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 நாட்களுக்கு சேர்த்து 1.40 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.