VIDEOS
தூள் பறக்கும் பிக்பாஸ் 7… இந்த முறை இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?.. ஜிபி முத்து வீடியோவால் குழம்பும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ளது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி என பழமொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய காலப்பகுதியில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவை அனைத்தையும் கமல்ஹாசன் பேசி ஒரு வழியாக சமாளித்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுதான் முதல் இடத்தில் உள்ளது. இதில் ஆறு சீசர்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக்பாஸ் 7 ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த சீசன்கள் போட்டியாளர்களாக வந்த பிரபலங்கள் இந்த வேலைகளை சரிவர பார்த்து வருகிறார்கள். அதன்படி ரசிகர்களை குழப்பும் விதமாக ஜிபி முத்து ஒரு ப்ரோமோவில் சில விஷயங்களை கூறியுள்ளார். அதே சமயம் இந்த முறை இரண்டு வீடு என்பதால் டைட்டில் வின்னரும் இரண்டாக இருப்பார்களா என்று ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.