விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக திகழ்வது பிக் பாஸ். இந்நிகழ்ச்சி மக்களிடையே விரைவாக பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கமலஹாசன். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கமலஹாசன் தான். இவர் தொகுத்து வழங்கும் விஷயம் தான் மக்களை அதிகமாக கவர்ந்தது.

பிக் பாஸ் 2017 முதல் சீசன் தொடங்கியது பின்பு பிக் பாஸ் சீசன் 7 வரை நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 8 தொடங்குவதற்கான வேலைகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது .

ஆனால் தற்பொழுது கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடியாது என்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார்.மேலும் அவர் நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பதையும் தெரிவித்து இருக்கிறார்.

எந்தெந்த படங்கள் என்பதை பார்க்கலாம். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறார் தக் லைப் என்ற படத்தில் சிம்பு கமல் அசோக் செல்வன் போன்றவர்கள் நடித்துள்ளதாகவும் இந்த படத்தை கமலஹாசனை தயாரித்து வருவதாகவும் உள்ளனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து விக்ரம் 2 படத்திற்கான வேலைகளையும் லோகேஷ் கனகராஜ் தொடங்க இருப்பதாகவும் அந்த படத்தை கமலஹாசன் அவர்களின் ராஜ ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவுடன் ஒரு படத்திற்கு கால் சீட் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த மாதங்களுக்கு முன்பு வெளியாகிய கல்கி பாகம் ஒன்று படத்தை கமலஹாசன் வில்லனாக நடித்திருப்பார் .இதனை தொடர்ந்து தற்பொழுது கல்கி பாகம் 2 இயக்குவதற்கு நடந்து வருவதாகவும் அதில் தனக்கு முக்கியமான ரோல் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சங்கர் இயக்கி கடந்த மாதம் வெளியான இந்தியன் 2 படம் மக்களிடையே சற்று வரவேற்பைப் பெறவில்லை எனினும் இந்தியன் 3 படைப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் பிரமோஷனில் தற்பொழுது பிசியாக இருப்பதாகவும் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார். ஆகையால் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு இயலவில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
