Connect with us

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

CINEMA

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய இயல்பான குணத்தலும் நகைச்சுவையாலும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் மிகச் சிறப்பாக விளையாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வந்தார்.

   

ஆனால் தற்போது அவருக்கு ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரெய்ன் ஆப் ஏரோ என்டர்டைன்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்தை ராகவ் மிருதாத் இயக்குகின்றார்.  இவர் ஏற்கனவே சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பாரம் என்ற திரைப்படத்திற்கு திரைகதை மற்றும் வசனமும் எழுதி இருக்கின்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் ராஜு பிரசாத் மற்றும் பவ்யா திரிகா ஆகியோரை வைத்து நகைச்சுவையாக ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்திற்கு ‘பன் பட்டர் ஜாம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் சென்னையில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இறந்த காலத்தின் வழிகளும், எதிர்காலத்தைப் பற்றிய பயன்களுக்கும் நடுவே ஊசலாடாமல் நிதானமாக நின்று எதிர்காலத்தை புன்னகையோடு எதிர் கொள்ள வேண்டும் என்ற கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கணத்தை முழுமையாக வாழப் பழகிக் கொண்டால் எந்த குறையும் இல்லை என்ற பாசிடிவ் விமர்சனங்களை நகைச்சுவையாக சொல்லும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது .அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று ராகவ் மிர்தாத் கூறி இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் தேவதர்ஷினி, சரண்யா பன்னுவண்ணன், சார்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற ஜூலை எட்டாம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top