சபாநாயகர் கையில் இருக்கும் அந்த சீக்ரெட் ஃபைல்… நேரில் ஆஜராகும் இபிஎஸ்?… பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய பிளான்…. அதிமுகவுக்குப் பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

தமிழக அரசியலில் அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளால் கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியே இத்தகைய முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எவ்வித கட்டாயமும் இன்றி சுயவிருப்பத்தின் பேரிலேயே பதவி விலகியதாக ராஜினாமா செய்த உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாற்றுக் கட்சியில் இணைந்த அவர்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் அதிமுக தலைமை மிக உறுதியாகச் செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் தொடர்ச்சியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவரைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டு பதவி விலகிய உறுப்பினர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் காரணமாகக் காலியான தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சட்டமன்றத் தலைவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தரப்பினரின் கவனமும் திரும்பியுள்ளது.

   

ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மூன்று கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காம் கட்ட விசாரணைக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, ஜூலை 30-ம் தேதி நடைபெறவுள்ள விசாரணையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் விளக்கங்களையும் ஒரே நேரத்தில் நேரில் கேட்டு இறுதி முடிவெடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   

அதேவேளையில், திட்டமிடப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்கள் காரணமாக ஜூலை 30 அன்று எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்பாரா அல்லது சட்ட ஆலோசகர்கள் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவி விலகிய உறுப்பினர்களின் கடித நகல்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிறகே உரிய பதிலளிக்க முடியும் என அதிமுக தரப்பு தெரிவித்து வருகிறது. ஒருவேளை உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் பேரில்தான் பதவி விலகினர் என்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக ஏற்கக்கூடும் என்பதால், அன்றைய தினம் வரவுள்ள முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.