மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தவெகவில் இணையப் போவதாகவும், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் இணைந்து அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த வதரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோவை செய்தியாளர்களைச் சந்தித்து எஸ்.பி. வேலுமணி விரிவான விளக்கமளித்துள்ளார்.
தான் கட்சி மாறி வேறு எங்குo செல்லப் போவதில்லை என்றும், தன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் மட்டுமே என்றும் வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் யாவும் வதந்திகளே எனக் குறிப்பிட்ட அவர், சென்னையில் வீண் வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கவே தான் கோவைக்கு வந்துவிட்டதாகக் கூறினார். மேலும், தான் யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்றும், சி.வி. சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்களின் சந்திப்புகள் வழக்கமான ஒன்றுதான் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இடைத்தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், சில மாதங்களுக்கு முன்பு இதே தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது தோல்வியடைந்திருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரிந்து சென்றவர்களையும், ஏனைய சக்திகளையும் பொதுச்செயலாளர் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அம்மா மறைவுக்குப் பின் தொண்டர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், 2026 தேர்தலில் தவெகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டதாகவும் தனது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், அவரை விமர்சிக்க தான் தயாராக இல்லை என்றும் வேலுமணி கூறினார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் தொடர்ந்து பலமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…