#BIG NEWS: காலையிலேயே ஷாக்… மீண்டும் போர்?…. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த மிக முக்கியமான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். பிப்ரவரி 28 முதல் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால், ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு உருவானது. இதனைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண முயற்சித்தார். ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்திருந்தது.

இந்தச் சூழலில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக அமெரிக்கக் குழுவும் பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தனது குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ள அதிபர் டிரம்ப், பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம் தேவையற்றது என்றும், செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அதிகாரப் பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என அவர் முன்வைத்துள்ள விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தனது முடிவை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தையில் தங்களுக்குத் தான் முழுமையான சாதகமான சூழல் இருப்பதாகவும், ஈரானிடம் கைவசம் எதுவுமில்லை என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் எங்களுடன் பேச விரும்பினால், செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டும்தான்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி முடிவும், அவரது கடுமையான நிலைப்பாடும் வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, மீண்டும் ஒரு போர் மேகத்தைச் சூழ்ந்துள்ளதை உணர்த்துகிறது.