Connect with us

ஹிந்தி நடிகரை போல் இருப்பதாக கூறிய இயக்குனர் பீம்சிங்.. பின்னாளில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த ஜாம்பவான்..!!

CINEMA

ஹிந்தி நடிகரை போல் இருப்பதாக கூறிய இயக்குனர் பீம்சிங்.. பின்னாளில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த ஜாம்பவான்..!!

 

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ.பீம்சிங். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். பீம்சிங் கிருஷ்ணன் பஞ்சு என்று அழைக்கப்பட்ட இரட்டை இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். பெரும்பாலும் ஏ.பீம்சிங் பா என ஆரம்பிக்கும் தலைப்புகளை தனது திரைப்படங்களுக்கு சூட்டினார்.

ஏ. பீம்சிங் - தமிழ் விக்கிப்பீடியா

   

 

அதில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பந்தபாசம், பாலாடை, பாதுகாப்பு கணவன் மனைவி இறைவன் கொடுத்த வரம் கருணை உள்ளம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு முறை ஏ.பீம்சிங் கிருஷ்ணன் பஞ்சு இயக்குனர்களின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணன் பஞ்சு ஒரு வாலிபரின் புகைப்படத்தை ஏ.பீம்சிங்கிடம் காண்பித்தனர்.

Imprints And Images Of Indian Film Music Sivaji Ganesan,, 43% OFF

 

அதனை பார்த்தவுடன் ஏ.பீம்சிங் அந்த வாலிபர் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகரை போல் இருக்கிறார் என கூறியுள்ளார். இந்த வாலிபர்தான் நமது அடுத்த படத்தின் கதாநாயகன். அவர் அந்த அறையில் இருக்கிறார். அவரை சென்று பாருங்கள் என கிருஷ்ணன் பஞ்சு கூறியுள்ளனர். பீம்சிங் அந்த அறைக்கு சென்று கணேசன் என்ற பெயர் கொண்ட அந்த வாலிபரை சந்தித்தார். அவருடன் அரை மணி நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.

சிவாஜியின் செல்லமான 'பீம்பாய்'... 'குடும்பக்கதை'களின் யதார்த்த இயக்குநர்;  பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு ...

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். முதல் நாள் நாள் பார்க்கும்போது இந்த கதாநாயகனை வைத்து தான் நாம் வெற்றி படங்களை கொடுக்க போகிறோம் என்பது ஏ.பீம்சிங்க்கு தெரியாது பீம்சிங் சிவாஜி கூட்டணியில் உருவான பா வரிசை படங்கள் ஆன பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்

Sivaji Ganesan - பாடகிக்கு சீர் அனுப்பிய சிவாஜி கணேசன்.. ரியல் பாசமலர் கதை  தெரியுமா?.. செம விஷயமா இருக்கே | Here are the unknown details about Sivaji  Ganesan - Tamil Filmibeat

author avatar
Priya Ram
Continue Reading
To Top