Connect with us

CINEMA

பாடுவதை தாண்டி Composing-லும் கலக்கிய பவதாரணி.. இசைஞானியின் மகள் இசையமைத்த 5 படங்கள்..

இன்றைய தினம் கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பாடகி பவதாரணியின் மரணம். ஒரு மிகப் பெரிய இசையமைப்பாளரின் மகள், பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் பாடிய பல பாடல்களை நாம் கேட்டு ரசித்திருக்கிறோம். அதேப் போல அவர் இசையமைத்த பாடல்கள், படங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? விரிவாக பார்க்கலாம்.

1. மித்ர் மை பிரண்ட்:

   

நடிகை ரேவதி இயக்குனராக அவதாரம் எடுத்த ‘மித்ர் மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் தான் இசைஞானியின் இளவரசி பவதாரணி இசையமைப்பாளராக அறிமுகமானார். ஷோபனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

#image_title

2. பிர் மிலேங்கே:

ஷில்பா ஷெட்டி, சல்மான் கான், அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தையும் ரேவதி தான் இயக்கியதோடு, பவதாரணி தான் இசையமைத்தார். இந்த படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு படமாக இருந்தது. இந்த படம் வெளியானவுடன் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

#image_title

3. அமிர்தம்:

பவதாரணி முதலில் இரண்டு பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து, அதன் பின் முதல் முதலாக தமிழுக்கு அமிர்தம் படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தை வேதம் புதிது கண்ணன் கதை எழுதி, இயக்கி, தயாரித்தார். இதில் அறிமுக நடிகர் கணேஷ் மற்றும் நவ்யா நாயர் இவர்களுடன் ராஜீவ், ரேகா, யுகேந்திரன் உள்ளிட்டோரும் இணைந்து நடித்தனர்.

4. இலக்கணம்:

கிராமத்துப் பின்னணியில் படமாக்கப்பட்ட இலக்கணம் என்ற படத்திற்கு பவதாரணி தான் இசையமைத்தார். இதில் அறிமுக நடிகர் விஷ்ணுப்பிரியன் கதாநாயகனாகவும், உமா கதாநாயகியாகவும் நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வசூல் ரீதியாக ஆதரவு கிடைக்காவிட்டாலும், இதில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது.

#image_title

5. மாயநதி:

2020 ஆம் ஆண்டு அசோக் தியாகராஜன் கதை எழுதி, இயக்கி, தயாரித்த இந்த படத்தில் ஆடுகளம் நரேன், வெண்பா, அப்புகுட்டி, அபி சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்தனர்.இந்த படத்திற்கு பெரிய பலமே பவதாரணியின் இசை தான். எமோஷனலான காட்சிகளில் அப்பா- மகள் இடையேயான பாச பாடலான ‘யாவும் இங்கு நீ தானே’ என்ற பாடல் உணர்வு பூர்வமாக அமைந்தது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top